வெளிநாட்டில் தங்கியுள்ளோரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை
6 view
ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். இதனிடையே, ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ.குஷான் என்பவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் அவர் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
The post வெளிநாட்டில் தங்கியுள்ளோரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டில் தங்கியுள்ளோரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
