மாவட்ட அபிவிருத்தி சபையை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை – டக்ளஸ் திட்டவட்டம்!
13 view
பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூட தயாராக இல்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(29.11.2022) நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை தீர்க்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவே அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கின்றது. இவ்வாறான சூழலில் 80 களின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்களினால் ஏகோபித்த…
The post மாவட்ட அபிவிருத்தி சபையை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை – டக்ளஸ் திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவட்ட அபிவிருத்தி சபையை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை – டக்ளஸ் திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
