யாழ்ப்பாண மக்களுக்கு ஆபத்து – மீண்டும் முகக் கவசம் அணியும் நிலை ?

6 view
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இன்று காலை 11.50 மணி நிலவரப்படி  கொழும்பில் உள்ள பட்டர்முல்ல பகுதிக்கு ஊதா நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது. இதேவேளை, மன்னார், வவுனியா, தம்புள்ளை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் யாழ்ப்பாணம், புத்தளம், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. எவ்வாறாயினும், களுத்துறை, எம்பிலிப்பிட்டி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் காற்றின் தரம் நல்ல மட்டத்தில் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post யாழ்ப்பாண மக்களுக்கு ஆபத்து – மீண்டும் முகக் கவசம் அணியும் நிலை ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース