கல்முனை வடக்கில் வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி!
6 view
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த ‘சுயமாக முன்னேறும் மனிதர்கள்’ எனும் தொனிப்பொருளிலான திகாமடுல்ல முயற்சியாண்மை வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி பிரதேச செயலாளர் ரி. ஜெ. அதிசயராஜ் தலைமையில் இன்று (30.11.2022) இடம்பெற்றது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அனுசரணையோடு நடைபெற்ற இந்த வர்த்தக கண்காட்சியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவிலுமுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை விற்பனை கூடாரங்கள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கண்காட்சியை திறந்து வைத்தார். இதில் அம்பாறை மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவி பணிப்பாளர் எம்.ஐ .நாசர், கல்முனை தபால் நிலையத்தின் பிரதம தபால் அதிகாரி பி.எம்.அஸ்ஹர்டீன், கல்முனை வடக்கு நிருவாக உத்தியோகத்தர் எம்.ஜீவராஜ், சமூர்த்தி தலைமைப் பீட…
The post கல்முனை வடக்கில் வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை வடக்கில் வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
