மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட மாணவன்! வெளியான காரணம்
8 view
அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,மாணவனின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபர் அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 9A உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார். கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது மற்றுமொரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர், மாணவனின் தந்தையிடம் கப்பம் கேட்டு, கொடுக்காததால், இவ்வாறு மாணவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி…
The post மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட மாணவன்! வெளியான காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட மாணவன்! வெளியான காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
