அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தமிழ்க் கட்சிகள் செல்லக் கூடாது! – த.வி.கூ. வலியுறுத்து
13 view
“மீண்டும் ஒருமுறை தமிழ்க் கட்சிகள் சில அரசுடன் ஒரு நிபந்தனை அற்ற பேச்சுக்குத் தயாராகி வருகின்றன. பிள்ளையைப் பெற முடியாது எனத் தெரிந்துகொண்டும் மீண்டும் மீண்டும் அரசுடன் தேன் நிலவுக்குச் சென்று வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும் ஏமாற்றி எம்மக்களையும் அவமதிக்கும் செயல் தேவைதானா?” – இவ்வாறு தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் மேல் சீறிப் பாய்ந்துள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி. அந்தக் கூட்டணியின் தலைவர் பரமசிவம் சிறீதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “தமிழர்களுடைய உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தில் ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது இளைஞர்களும் யுவதிகளும் எம்மினத்தின் எதிர்காலத்துக்காகத் தமது உயிர்களை விதைத்திருக்கிறார்கள். அவர்களுடன் இருநூறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் நாம் இழந்திருக்கிறோம். எமது உறவுகள் உலகம் முழுவதும் சிதறுண்டு போய் இருக்கிறார்கள். இப்படியான இழப்புக்களுடன் கூடிய ஒரு இனத்தின் சார்பில் இதனுடன் சம்பந்தமே இல்லாத ஒரு…
The post அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தமிழ்க் கட்சிகள் செல்லக் கூடாது! – த.வி.கூ. வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தமிழ்க் கட்சிகள் செல்லக் கூடாது! – த.வி.கூ. வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
