வடக்கு கிழக்கில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
6 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என இலங்கை வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வடக்கு கிழக்கில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
