பத்து வருடங்களாக தந்தையினால் மூன்று பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை!
6 view
ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பத்து வருடங்களாக இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திபாங்கொட சமகி மாவத்தையில் வசிக்கும் 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்து வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி பிள்ளைகளை விட்டுச்சென்றமையினால் 13 வயது மகன், 16 வயது இளைய மகள் மற்றும் 24 வயது மூத்த மகள் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதன்போது, மூத்த மகள் 11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், 13 வயதுடைய மகனும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான தந்தையினால் 16 வயது மகளை துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு (1929) செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், மத்தேகொட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதிகாரிகள் குழுவொன்று வீட்டுக்குச்…
The post பத்து வருடங்களாக தந்தையினால் மூன்று பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பத்து வருடங்களாக தந்தையினால் மூன்று பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
