கொள்ளையிட சென்ற 6 பேர் இளைஞர்களால் மடக்கிப்பிடித்து நையப்புடைப்பு
7 view
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வீடுகளுக்குள் புகுந்து திருட முயன்ற 3 பேர் உட்பட 6 பேரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்போது குறித்த கொள்ளையர்கள் மந்துவில் கிராம இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு திருடச்சென்றவர்களில் முதலில் 3 பேரை பிடித்ததாகவும், பின்னர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொண்ட தேடுதலில் மேலும் 3 பேரும் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடமிருந்து கோடரி, முகமூடி. கத்தி போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் அனைவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
The post கொள்ளையிட சென்ற 6 பேர் இளைஞர்களால் மடக்கிப்பிடித்து நையப்புடைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொள்ளையிட சென்ற 6 பேர் இளைஞர்களால் மடக்கிப்பிடித்து நையப்புடைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
