உலகக்கிண்ண கால்பந்து: அமெரிக்காவும் ஈரானும் இன்று மோதல்
6 view
அரசியலில் பரம வைரிகளான ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் பி குழுவுக்கான உலகக் கிண்ண முதல் சுற்றின் கடைசி லீக் போட்டியில் ஒன்றையொன்று இன்று எதிர்த்தாடவுள்ளன. ஐக்கிய இராச்சிய நாடுகளான இங்கிலாந்தும் வேல்ஸும் மற்றைய லீக் போட்டியில் விளையாடவுள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி நொக்-அவுட் சுற்றில் விளையாட தகுதிபெறும். அதேவேளை, இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற இங்கிலாந்துக்கு ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்படுகிறது.. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட அணிகளின் நிரல்படுத்தலுக்கு ஏற்ப அணிகளுக்கான குலுக்கல் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டபோது ஒரே குழுவில் (பி) இடம்பெற்ற அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டியை முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது. இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் ஒரே ஒரு தடவை 1998 உலகக் கிண்ணப் போட்டியில் சந்தித்துக்கொண்டபோது 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈரான் வெற்றிபெற்றிருந்தது. இரண்டு அணிகளும் விளையாடிய சிநேகபூர்வ சர்வதேச போட்டி கோல் எதுவும்…
The post உலகக்கிண்ண கால்பந்து: அமெரிக்காவும் ஈரானும் இன்று மோதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகக்கிண்ண கால்பந்து: அமெரிக்காவும் ஈரானும் இன்று மோதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
