வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் – சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய!
6 view
சுகாதார அமைச்சு, அரச நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல் அறிவுறுத்தல்களுக்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,அவர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல், வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் என இலங்கையில் உள்ள தூதுவராலயங்களுக்கு அறிவிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (29) எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மருத்துவ துறையின் சேவை முன்னெடுக்கப்படுகின்றது.உயிர்காக்கும் 14 வகையான அத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படவில்லை.948 அத்தியாவசிய மருந்து பொருட்கள் தேவையான அளவு உள்ளன. வெளிநாட்டு சந்தையில் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. அத்துடன் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் பில்லியன் கணக்கான நிதி செலவிடப்படுகிறது என அவர் கூறினார். வெளிநாட்டு கையிருப்பு…
The post வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் – சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் – சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
