மாணவரின் உடலுக்கு தீ வைப்பு சம்பவம்: இதுதான் பின்னணி
8 view
இவ்வருட சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவரின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார். கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது மற்றுமொரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் குறித்த மாணவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த நபர், மாணவரியின் தந்தையிடம் கப்பம் கேட்டு, கொடுக்காததால், இவ்வாறு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கைகளிலும் கழுத்திலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால்…
The post மாணவரின் உடலுக்கு தீ வைப்பு சம்பவம்: இதுதான் பின்னணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவரின் உடலுக்கு தீ வைப்பு சம்பவம்: இதுதான் பின்னணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
