பணிப்பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ராணுவ அதிகாரி கைது!
6 view
வேலைவாய்ப்பு நிறுவனங்களினால் அழைத்து வரப்பட்ட பெண்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவர்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரகம, விடகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலைக்கு அசன்றிருந்த பெண் ஒருவர் அந்த வீட்டை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்புக்வெவ, ஹுருலு, நிககேவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர், வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக பண்டாரகமவில் உள்ள வீடு ஒன்றுக்குப் பணிப்பெண்ணாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தனது முதலாளியால் இரண்டு இரவுகள் அங்கு தங்க வைக்கப்பட்டு தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
The post பணிப்பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ராணுவ அதிகாரி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணிப்பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ராணுவ அதிகாரி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
