கஞ்சாவினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார்
29 view
ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சாவை ஏற்றுமதி தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஆயுர்வேத திணைக்களத்தின் அனுமதியின் கீழ் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவினை ஏற்றுமதித் தொழிலாக மேம்படுத்துவதற்கு நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதற்குத் தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளையும் நாங்கள் ஏற்கனவே தயார் செய்துள்ளோம். வரவு செலவுத் திட்ட விவாதத்திற்குப் பிறகு அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.´
The post கஞ்சாவினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஞ்சாவினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
