பாடசாலைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொண்ட உயர்தர மாணவர்களுக்கான நிவாரணத் திட்டம்
7 view
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பாடசாலைக்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்ட உயர்தர மாணவர்களுக்காக நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80% வருகை வீதம் மாணவர்கள் கட்டாயம் என கல்வி அமைச்சு நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த ஒழுங்குமுறை 2022 உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் இருக்கும் மாணவர்களுக்குப் பொருந்தாது. இன்று (29) காலை வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், கல்வி அமைச்சரிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு 80% வருகைப் பதிவு கட்டாயம் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி, எதிர்ப்புக்கள் மற்றும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாடசாலைக்கு சமூகமளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட மாணவர்களுக்கு விசேட நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
The post பாடசாலைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொண்ட உயர்தர மாணவர்களுக்கான நிவாரணத் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொண்ட உயர்தர மாணவர்களுக்கான நிவாரணத் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
