நாட்டின் அபிவிருத்தி, ஒழுக்கத்தை கெடுக்க கூடாது
6 view
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளை நாட்டில் பின்பற்றப்படும் ஒழுக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வமதத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் முன்மொழிவுகள் குறித்து விளக்கமளித்த போதே சர்வமதத் தலைவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்தனர். பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரவணக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு, கடன் மறுசீரமைப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், போக்குவரத்து திறன், எரிசக்தி போன்ற துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து…
The post நாட்டின் அபிவிருத்தி, ஒழுக்கத்தை கெடுக்க கூடாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் அபிவிருத்தி, ஒழுக்கத்தை கெடுக்க கூடாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
