யாழ்ழில் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருளை பெறுவதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பு
6 view
யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது. யாழ்.பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெயை பெற்றுக்கொண்டனர். இதேவேளை அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய புதிய வேலைத்திட்டத்தின் கீழ், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நாளாந்தம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பௌசர்களின் எண்ணிக்கை சுமார் 45 ஆக அதிகரித்துள்ளதாகவும் இது 17 வீத அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post யாழ்ழில் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருளை பெறுவதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ழில் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருளை பெறுவதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
