தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன் – ஆளுநர் ஆர்.என். ரவி
6 view
தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தாய் மொழியில் படித்தால்தான் அறிவை வளர்க்க முடியும் என்றும் புத்தக அறிவு மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டுள்ளார். திறன் கொண்ட கல்வியே மாணவர்களை முழுமையாக்கும் என்றும் அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். திருக்குறளை அனைத்து மாநிலங்களில் பாடத்திட்டமாக மாற்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளது எனவும் கூறியுள்ளார்.
The post தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன் – ஆளுநர் ஆர்.என். ரவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன் – ஆளுநர் ஆர்.என். ரவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
