யாழில் இளைஞன் மீது படையினர் தாக்குதல்- விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு!
29 view
மானிப்பாய் பகுதியில் இளைஞன் மீது இராணுவம் மற்றும் விசேட அதிரடி படை பொலிஸார் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மானிப்பாய் சந்தியில் திங்கட்கிழமை(28) இரவு சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது அப்பகுதியில் கடமையில் நின்றிருந்த இராணுவ மற்றும் விசேட அதிரடி படை பொலிஸாரால் தாக்கப்பட்டமை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், செய்திகளை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக தாக்குதலுக்குள்ளான நபரின் வாக்குமூலம் செவ்வாய்க்கிழமை(29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து பதிவு செய்யப்பட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட மருத்துவ அறிக்கையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் ஆலடி சந்தியில் திங்கட்கிழமை(28) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் ஆலடி சந்தியில் பொலிஸார் மற்றும்…
The post யாழில் இளைஞன் மீது படையினர் தாக்குதல்- விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இளைஞன் மீது படையினர் தாக்குதல்- விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
