மலையகத்தில் முதன்முறையாக 'கம்யூனிட்டி கிச்சன்' செயல்திட்டம் அங்குராப்பணம்!
6 view
கனேடிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சிலோன் யூத் மூவ்மெண்ட் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டம் ஆகியன இணைந்து மலையகத்தில் முதன்முறையாக சமூக சமையலறை கம்யூனிட்டி கிச்சன் என்ற செயல்திட்டம் இன்று (29.11.2022) அங்குராணப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேனியல் பூட் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய பாரத் அருள்சாமி ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல அரச அதிகாரிகளும், மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர் இக் கம்யூனிட்டி கிச்சனின் மூலமாக 100 சிறுவர்களுக்கு தினமும் போஷாக்கான உணவு வழங்குவதற்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, திறன் அபிவிருத்தி செய்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கண்டி பன்வில மருத்துவ அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான போஷாக்காக பானம், மருந்து வகைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய…
The post மலையகத்தில் முதன்முறையாக 'கம்யூனிட்டி கிச்சன்' செயல்திட்டம் அங்குராப்பணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையகத்தில் முதன்முறையாக 'கம்யூனிட்டி கிச்சன்' செயல்திட்டம் அங்குராப்பணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
