இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்!
15 view
ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக் கடத்தலுக்கு உள்ளாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, இலங்கை தூதரகத்தின் அதிகாரி குஷானை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்தார். இந்தநிலையில் இன்று காலை நாடு திரும்பியபோது அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
