கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் – அமைச்சர் கெஹலிய
27 view
நாட்டைவிட்டு தேவையான அனுமதியைப் பெறாமல் வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை காலம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மருத்துவ நிபுணர்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடுவோர் தேவையான அனுமதியைப் பெற்று நாட்டைவிட்டு வெளியேற முடியும் என அவர் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் சேவையிலிருந்து வெளியேறியவர்களாகக் கருதப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
The post கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் – அமைச்சர் கெஹலிய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் – அமைச்சர் கெஹலிய appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
