மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார்: ஜனாதிபதி
6 view
மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அமைக்க முன்மொழிந்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த ரணில், “முன்னாள் ஜனாதிபதி, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை நான் செவிமெடுத்தேன். அதனைச் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இது நல்லதென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள நாம் இதற்கு முழுமையாக ஆதரவளிப்போம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.
The post மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார்: ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார்: ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
