உயர்தர மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம் – அரசு வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

31 view
பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட அறிவிப்பில், 2023 ஆம் ஆண்டு முதல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80வீத பாடசாலை வருகை கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “பாடத்திட்டத்தை உள்ளடக்க பாடசாலைக்கு மாணவர்களை வரவழைக்க 80வீத வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் கொரோனா பரவலின்போதும் போராட்டங்களின்போதும் போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால் பாடசாலைக்கு வருவதற்கு சிரமப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு நிவாரணத் திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சருக்குத் தெரிவிக்கிறோம். அதற்கு அவர் சாதகமாக பதில் அளிப்பார்” என அவர் மேலும் தெரிவித்தார்.
The post உயர்தர மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம் – அரசு வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース