பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்காதீர்கள் – தமிழ்க் கட்சிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
27 view
“தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது. முதலில் பேச்சு மேசைக்கு வாருங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பட்ஜட் விவாதம் முடிவடைந்த பின்னர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சர்வகட்சி கூட்டம் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மூன்று நிபந்தனைகளை விதித்திருந்தனர். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்காதீர்கள். முதலில் பேச்சு மேசைக்கு வாருங்கள். பேச்சு மேசையில் பேசி, தீர்வு தொடர்பில் முடிவு எடுப்போம். என்ன பிரச்சினை என்றாலும் பேச்சு மூலம்தான் நல்ல தீர்வு கிடைக்கும். கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும். கடந்த காலத் தவறுகளை மீண்டும் இழைக்காதீர்கள்”…
The post பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்காதீர்கள் – தமிழ்க் கட்சிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்காதீர்கள் – தமிழ்க் கட்சிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
