தமிழரை அடக்கிக்கொண்டு தீர்வு எதுவும் காண முடியாது! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு
13 view
தமிழர்களைப் புண்படுத்திக் கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களால் தீர்வு எதையும் காண முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “இறுதி யுத்தம் 2009 மே மாதத்தில் முடிவுடைந்த பின்னரும் சிங்கள பெளத்த பேரினவாத வக்கிர அடிப்படைவாதம் குறையவில்லை. அதற்காகப் பல உண்மைகளைக் கூறலாம். அவற்றில் ஒன்றாத இருப்பது மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் தாண்டியடியில் அமைந்துள்ள மறைந்த தமிழ் உறவுகளான மாமறவர்களின் துயிலும் இல்லமாகும். இங்கு மரணித்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் அமைந்துள்ள துயிலும் இல்லத்தின் மேலாக அதிரடிப் படையினர் முகாம் அமைத்துள்ளனர். கடந்த 13 ஆண்டுகளாக இந்த முகாம் செயற்பட்டு வருகின்றது. அதிரடிப் படைகளின் சப்பாத்துக்கால்களில் கீழ் சமாதிகள் மிதிபட்டுக் கொண்டிருக்கின்றன. மண்முனை மேற்குப் பிரதேச செயலகப்பிரிவில் பொலிஸ் நிலையம் ஒன்று இயங்கி…
The post தமிழரை அடக்கிக்கொண்டு தீர்வு எதுவும் காண முடியாது! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரை அடக்கிக்கொண்டு தீர்வு எதுவும் காண முடியாது! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
