குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு- மட்டக்களப்பில் சம்பவம்
5 view
மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி குளம் பகுதியில் இருந்து 57 வயதுடைய ஆணோருவரின் சடலம் போலீசாரால் நீக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதியைச் சேர்ந்த 57 வயதுடைய வீரகுட்டி தவராஜா என்பவரை இவ்வாறு நேற்று சரளமாக மீட்கப்பட்டுள்ளார்,என்று காத்தான்குடி போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திருநீற்றுக்கேணி குளத்தின் அருகில் காணாமல் போன தவற ராஜாவின் பாதனி இருப்பதை கண்டு குழப்பகுதியை சுற்றி தேடிய போது அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் வலிப்பு நோயினால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் மிக மோசமாக மது போதைக்கு அடிமையானவர் என்றும் போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு- மட்டக்களப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு- மட்டக்களப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
