ஓமானுக்கு மனித கடத்தல் – விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அதிகாரி
6 view
இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ஓமானின் இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் இ.குஷான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 3.57 அளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இன்று நாடு திரும்பியபோதே அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
The post ஓமானுக்கு மனித கடத்தல் – விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அதிகாரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓமானுக்கு மனித கடத்தல் – விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அதிகாரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
