வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதில் நெருக்கடி! புலம்பெயர் தமிழர்கள் உதவ தயார்- சிறீதரன்!
30 view
வியட்நாமில் உயிரிழந்த சுந்தரலிங்கம் கிருதரனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் பணம் செலுத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அண்மையில் படகு மூலம் கனடா செல்ல முயன்ற 303 இலங்கையர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது எனக் கூறி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றனர். இவர்களில் 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வர 30 லட்சம் ரூபாய் தேவை என அவரது மனைவி அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, வெகுஜன ஊடக அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்…
The post வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதில் நெருக்கடி! புலம்பெயர் தமிழர்கள் உதவ தயார்- சிறீதரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதில் நெருக்கடி! புலம்பெயர் தமிழர்கள் உதவ தயார்- சிறீதரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
