பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் பலி
6 view
வேலூர்,நவ 28 வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில், திமுக கட்சி சார்பில் கட்சி நிகழ்ச்சி ஒன்று இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்க இருந்த நிலையில், அமைச்சரை வரவேற்பதற்காக திமுக நிர்வாகிகள் பேனர் கட்டும்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்திலிருந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான மார்கபந்து மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஒருவர் மேலும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து இருவரும் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்கபந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கே வி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கப்பட்ட மற்றொரு நபருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
