வடக்கில் நாளை முடங்கும் போக்குவரத்து சேவைகள்
6 view
இ.போ.ச. யாழ் சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு இன்றையதினம் திங்கட்கிழமை (28) தீர்வு கிடைக்காவிட்டால் நாளை செவ்வாய்க்கிழமை (29) வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திங்கட்கிழமை(28) காலை முதல் தீடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழையமுடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, “தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக” உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய…
The post வடக்கில் நாளை முடங்கும் போக்குவரத்து சேவைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் நாளை முடங்கும் போக்குவரத்து சேவைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
