ஊழல் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – கொட்டகலை பிரதேச சபை தவிசாளர்

12 view
 ” கொட்டகலை பிரதேச சபையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யாகும். ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார்.” என கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் இராஜமணி பிரசாந் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட  பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நுவரெலியா பிரதேச செயலக மண்டபத்தில் அதன் தலைவரும், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (28) நடைபெற்றது. இ.தொ.காவின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது கொட்டகலை பிரதேச சபை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில் பொய்யான கருத்துகளை முன்வைத்துள்ளார் எனக்கூறி, அதற்கான ஆதாரங்களை தவிசாளர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்தார். விசேட விளக்கமொன்றையும் முன்வைத்தார். இதன்போது கருத்து…
The post ஊழல் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース