மலையகத்தில் 17 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பு
6 view
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் 28.11.2022 அன்று மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாடசாலையில் இருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post மலையகத்தில் 17 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையகத்தில் 17 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
