தாயைப் பார்க்கச் சென்ற சகோதரர்களை அடித்து முறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்! – யாழ். போதனாவில் கொடூரம்
29 view
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயை பார்க்க சென்ற சகோதரர்களை, அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயுற்று 3 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு தாயைப் பார்ப்பதற்காக கடந்த சனிக்கிழமை மூன்று சகோதரர்கள் சென்றுள்ளனர். அதில் இரண்டாவது சகோதரரிம் மட்டுமே அனுமதிச் சீட்டு (பாஸ்) இருந்த நிலையில், அவரை மட்டும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளே அனுப்பியுள்ளனர். மற்றைய இருவரும் வரிசையில் காத்திருந்தனர். அதில் மூத்த சகோதரன் தாயை சென்று பார்வையிட அனுமதிக்குமாறு, பாதுகாப்பு உத்தியோகத்தரை கேட்டபோதும் அவரை உள்ளே விடாமல் அவரை தள்ளி விட்டுள்ளார். இதனால் குறித்த நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் பாதுகாப்பு தலைமை அதிகாரி (ஓ.ஐ.சி) குறித்த நபரை தாக்கியுள்ளார். ஏன் என்னை தாக்குகிறீர்கள் என்று நியாயம் கேட்டவரை, அங்கிருந்த அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களும்…
The post தாயைப் பார்க்கச் சென்ற சகோதரர்களை அடித்து முறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்! – யாழ். போதனாவில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாயைப் பார்க்கச் சென்ற சகோதரர்களை அடித்து முறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்! – யாழ். போதனாவில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
