ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் சாதனை!
6 view
2022ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரின் இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் – மகாராஷ்டிரா ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உத்தரப் பிரதேச அணித்தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 220 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர் போட்டியின் இறுதி ஓவரில் (50ஆவது ஓவர்) தொடர்ச்சியாக 4 பந்துகளுக்கு 4 சிக்ஸர்களை விளாசினார். இதனையடுத்து, ஐந்தாவது பந்திலும் ருதுராஜ் சிக்ஸர் ஒன்றை அடித்த போதிலும், அது செல்லுபடியற்ற பந்துவீச்சாக நடுவரால் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஓவரின்…
The post ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
