சீன பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- இலங்கை அரசுக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்!
19 view
யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் நவம்பர் 25, 2022 கையொப்பமிட இரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை ஊடகங்களில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் எங்களின் நிலத்தை அபகரிக்கும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலை அறிந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துணிச்சலாக மறுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம் என யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐ.நா சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் சிறிலங்கா ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தைகள் உட்பட…
The post சீன பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- இலங்கை அரசுக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- இலங்கை அரசுக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
