மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை குறைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை
6 view
பொதுமக்கள் செலுத்தும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணய சேவைக்கான கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று காலை வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அண்மைக்காலமாக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணய சேவைக்கான கட்டணத்தை விலையேற்றம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இவ்விடயத்தில் ஓரளவு என்றாலும் நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கயந்த கருணாதிலக்க கேட்டுக்கொண்டார்.
The post மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை குறைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை குறைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
