பசில் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு பொய்யானது – ஆளும்கட்சி

6 view
பசில் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ச நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ஆளும்கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் பசில் ராஜபக்சவும் அவரது மனைவியும் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினலை பயன்படுத்த 400 டொலர்களை செலுத்தியுள்ளனர். மேலும் அவரை விமான நிலையத்தில் வரவேற்க கணிசமான மக்கள் வந்திருந்த நிலையில், அவர்களில் சிலர் அனுமதியுடன் பிரமுகர் முனையத்திற்கு சென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது என்றும் இது தொடர்பான கட்டணங்கள் பசில் ராஜபக்ஷவினால் செலுத்தப்பட்டதாகவும் பொதுஜன பெரமுன கூறியுள்ளது.
The post பசில் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு பொய்யானது – ஆளும்கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース