இராணுவத்தினருக்கு காணி சுவீகரிப்பு – காரைநகரில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

5 view
இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/44 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 44 குடும்பங்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்திற்கு அளவிடுவதற்கு அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த காணியை அளவிடுவதற்கு வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாங்கள் சொந்த காணிகள் இல்லாமல் வாடகை வீடுகளில் இருந்து மழையிலும் தண்ணீரிலும் அல்லல்படுகின்றோம். எங்களது நிலையை கருத்தில் கொள்ளாது இராணுவத்தினருக்கு காணி அளவிடுவதற்கு முயற்சிக்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அண்மையில் வடக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களது காணிகளை மக்களுக்கே வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.  இது இவ்வாறு இருக்கு நில அளவை திணைக்களத்தினர் இன்றையதினமும் காணி அளவீட்டிற்கு வருகைதந்திருக்கின்றனர். காரைநகர் பிரதேச செயலர் தமக்கு காணி அளவிடுமாறு அறிவித்தல் வழங்கிய நிலையிலேயே தாங்கள் காணி அளவிடுவதற்கு வருகை தந்ததாக நில அளவை…
The post இராணுவத்தினருக்கு காணி சுவீகரிப்பு – காரைநகரில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース