ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
7 view
ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்டமூலத்திற்கு விரைவில்அங்கீகாரம் வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்ட அவசர சட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டமொளத்திற்கு ஆளுநரின் அங்கீகாரம் கிடைக்காததே இதற்குக் காரணம் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவசர சட்டம் காலாவதியாகும் நிலையில், தமிழ்நாட்டில் ஒன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்டமூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
