உணவு பணவீக்கத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம்
16 view
உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக மோசமான உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளதுடன், அங்கு 321வீதம் உணவு பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக 208 வீதம் லெபனானிலும், 158 வீதம் வெனிசுலாவிலும் உணவு பணவீக்கம் காணப்படுகின்றது.
The post உணவு பணவீக்கத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவு பணவீக்கத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
