மின் கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம் – 1 லட்சம் வீடுகள் இருளில்!
30 view
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் மொவ்ண்ட்கொமெரி நகரம் உள்ளது. இந்நகரின் ஹைதுர்பர்க் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது நேற்று இரவு சிறிய ரக விமானம் மோதியது. 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மின் கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. விமானம் மோதியதால் மின் இணைப்பு தடைபட்டது. இதனால், 1 லட்சம் வீடுகள், தொழில்நிறுவனங்களில் மின் இணைப்பு தடைபட்டது. இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விமானத்தில் சிக்கிய 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், விமானம் மோதியதால் இருளில் மூழ்கிய நகருக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The post மின் கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம் – 1 லட்சம் வீடுகள் இருளில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம் – 1 லட்சம் வீடுகள் இருளில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
