முதல்முறையாக டேவிஸ் கிண்ணத்தை வென்றது கனடா!
9 view
உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும், டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், அவுஸ்ரேலியாவை வீழ்த்தி கனடா முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயினின் மலகாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், 2-0 என்ற கணக்கில் கனடா வெற்றிபெற்றது. மார்ச் மாதம் நடந்த தகுதிச் சுற்றில் நெதர்லாந்திடம் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற கனடா, வியாழன் காலிறுதியில் ஜேர்மனியையும், சனிக்கிழமை நடந்த அரையிறுதியில் இத்தாலியையும் தோற்கடித்து, பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒற்றையர் போட்டிகளில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றனர்.
The post முதல்முறையாக டேவிஸ் கிண்ணத்தை வென்றது கனடா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதல்முறையாக டேவிஸ் கிண்ணத்தை வென்றது கனடா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
