இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என ஜனாதிபதி கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது – ஹிருணிகா
6 view
வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனக் கூறும் ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கக்கூடிய தீர்வு இதுவல்ல என குறிப்பிட்டுள்ள அவர், முதலில் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமது வாழ்க்கை தற்போது பாரியதொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே நாட்டு மக்கள் போராடுகிறார்கள் என்பதை அரசாங்கமும் ஜனாதிபதியும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டால் ஹிட்லர் போன்று செயற்படுவது தீர்வாக அமையாது என குறிப்பிட்ட ஹிருணிகா, அவ்வாறு பயணித்தால் நீண்டகாலம் ஆட்சியை நடத்த முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
The post இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என ஜனாதிபதி கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது – ஹிருணிகா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என ஜனாதிபதி கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது – ஹிருணிகா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
