நாடளாவிய ரீதியில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..!
34 view
சுங்கத் திணைக்களத்தின் அலட்சிய போக்கினால் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அதன் இணைப்பாளர் அசேல சம்பத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடளாவிய ரீதியில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. இறக்குமதி 50 சதவீதத்தினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மறுபுறத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவை விடுவிக்காமல் சுங்கத் திணைக்களத்தினரும், ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகார சபையினரும் அலட்சிய போக்கினை கடைப்பிடிக்கின்றனர். இதனால் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட பால்மா காலாவதியானதன் பின்னர் கால்நடைகளுக்கான தீவனமாகவே வழங்கப்படுகின்றது. எனவே சுங்கப்பிரிவினரின் அலட்சியப்போக்கினால் நாட்டு பிள்ளைகளே பால்மா இன்றி உள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
The post நாடளாவிய ரீதியில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
