ரணிலின் தீர்மானம் நாட்டுக்கு உதவாது – விமல் தெரிவிப்பு
42 view
ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வினை பெற்றுக் கொடுக்காது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள் என மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ‘மேலவை இலங்கை கூட்டணி’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் களமிறங்கி போராடினார்கள். போராட்டம் வெற்றி பெற்றது. ஆனால் வெற்றி கோப்பையை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்துக் கொண்டார் சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிக மோசமான பொருளாதார பாதிப்பை தற்போது நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ளோம். நாடு என்ற ரீதியில் வரலாற்று ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.தற்போதைய நிலையை போன்று கொடிய நிலையை இதற்கு முன்னர் நாட்டு மக்கள் எதிர்கொள்ளவில்லை. 74 ஆண்டு கால அரசியல் பின்னணி தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம்…
The post ரணிலின் தீர்மானம் நாட்டுக்கு உதவாது – விமல் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் தீர்மானம் நாட்டுக்கு உதவாது – விமல் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
