மானிட விடுதலையை நேசித்தவர்களை போற்றி வணக்குகிறோம் – முன்னாள் போராளிகள் கட்சி அறிக்கை!
36 view
தமது இனம் வாழ்வுரிமை இழந்து தமது நாட்டுக்குள்ளேயே ஏதிலிகள் ஆக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அகிம்சை முறையிலும் அரசியல் ஊடாகவும் தீர்வுகள் எட்டப்படவில்லை. இலங்கை தீவில் தங்களது பூர்வீக நிலங்களில் ஆட்சி உரித்துடன் வாழ்வதற்கு தமது இளமை காலங்களை துறந்து உறவுகளை பிரிந்து தமது இன்னுயிரை அர்பணிக்க புறப்பட்ட அற்புதமானவர்கள்தான் எமது மாவீரர்கள். அவர்களின் தியாகங்களையும் மாண்புகளையும் நினைவில்கொள்ளும் புனித நாள். ஈழத்தமிழினம் இந்த மண்ணிலே தனக்கேயுரிய வரலாற்று மாண்புகளுடனும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழவேண்டுமெனின் நாம் எமக்கேயான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டுமென திடசங்கற்பம் கொண்டு போராடி தமது இன்னுயிரை இந்த மண்ணிற்காய் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவு கூறும் நாள். ஜனநாயக ஏதுநிலைகள் தகர்ந்து போனதொருசூழலில் ஓர் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புப் பொறிமுறையை எதிர்கொள்ள ஏந்தப்பட்ட ஆயுதங்கள் ஓர் தேசிய இன விடுதலைப் போராட்டமாக வியாபித்தது. தாயக விடுதலைக்கான பாரிய அர்ப்பணிப்புக்களுடன், கேள்விக்குரியதான பல தசாப்தங்களை ஈழத்தமிழினம் கடந்து வந்துள்ளது.…
The post மானிட விடுதலையை நேசித்தவர்களை போற்றி வணக்குகிறோம் – முன்னாள் போராளிகள் கட்சி அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மானிட விடுதலையை நேசித்தவர்களை போற்றி வணக்குகிறோம் – முன்னாள் போராளிகள் கட்சி அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
