மாவீரா் மில்லாின் நினைவேந்தல் நெல்லியடியில் அனுஸ்டிப்பு!
13 view
தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும். இந்நிலையில் இன்றையதினம் இலங்கை உட்பட தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனா். இதன்போது மாவீரா்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
The post மாவீரா் மில்லாின் நினைவேந்தல் நெல்லியடியில் அனுஸ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவீரா் மில்லாின் நினைவேந்தல் நெல்லியடியில் அனுஸ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
