கோப்பாய் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தை விலக்கி மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசு இடமளிக்க வேண்டும்- – தவிசாளர் நிரோஷ்!
19 view
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை குறித்த பிரதேசத்தின் ஆட்சிக்குரிய உள்ளுராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைப்பதன் வாயிலாக எமது மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் போரில் ஆகுதியாகிய மறவர்களுக்கு நினைவஞ்சலிச் சுடரினை ஏற்றிய பின் கருத்துரைக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார். சேமக்காலைகளை இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களே முகாமை செய்கின்றன. போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடங்களை போருக்குப் பின் அரச படைகள் கிளறி எறிந்து மானிட தர்மத்திற்கும் போரியல் விதிமுறைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார்கள். ஒரு தாய் இறந்த தன் பிள்ளையை நினைவு கொள்ள முடியாது என்று அரசு கருதுமாக இருந்தால் அதையொத்த அரச அடக்குமுறையும் அரச பயங்கரவாதம் வேறு என்னவாக இருக்க…
The post கோப்பாய் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தை விலக்கி மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசு இடமளிக்க வேண்டும்- – தவிசாளர் நிரோஷ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோப்பாய் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தை விலக்கி மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசு இடமளிக்க வேண்டும்- – தவிசாளர் நிரோஷ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
