பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை
17 view
கல்விக் காலம் முடிவடைத்த பின்னரும் பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களில் சுமார் 5 வீதமானவர்கள் அவர்களின் படிப்புக் காலத்தை முடித்த பின்னரும் பல்கலைக்கழகங்களில் உள்ளதாகவும் மேலும் இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.அதன்படி, இவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து உபவேந்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 4 வருட பட்டப்படிப்பைப் பெறுவதற்கு பல்கலைக்கழகத்திற்கு நுழையும் மாணவர்கள் 04 வருடங்களில் பட்டம் பெறாவிட்டால் பல்கலைக்கழகத்தில் தங்க முடியாது. 90 வீதமான மாணவர்கள் 4 வருட பட்டப்படிப்பிற்கு பதிவு செய்து 04 வருடங்களில் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றனர். எஞ்சியவர்கள் மேலும் 03 வருடங்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் . அதன்படி, இவ்வாறான மாணவர்கள்…
The post பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
